கடையம்:
வனத்துறையினர் அழைத்து சென்ற விவசாயி இறந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர், தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வனத் துறையினர் 5 பேர் அணைக்கரை முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் அவர் இறந்து போனார்.
இதை அறிந்த அவரது உறவினர்கள், கடையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர் பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது.இந்த செய்தியை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இதுதொடர் பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
ரூ. 10 லட்சம் நிவாரணம்
இதற்கிடையே உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.