சென்னை,ஜூலை 26- தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரு கிறது. இதுகுறித்து செய்தியாளர் களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தமிழ கத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கி றது” என்றார். வட தமிழகத்தின் ஒரு சில பகுதி களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை இருக்கும் என வும் வட தமிழக மாவட்டங்க ளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வும் அவர் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் பாலச்சந்தி ரன் தெரிவித்தார்.