குடவாசல்:
கோயம்புத்தூரில் இயங்கி வரும் பின்னலாடை நிறுவனத்திற்கு சிறுமிகளை வேலைக்காக ரூ. 20000த்திற்கு விற்ற சிறுமிகளின் பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமிகளை தனிப்படையினர் மீட்டனர்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது 13, 14 வயது மகள்களை அவரதுபாட்டி விஜயலட்சுமி குடும்ப வறுமை காரணமாக கோயம்புத்தூர் புளியம்பட்டியில் இயங்கி வரும் மகாமேரூர் ஸ்பின்னிங் மில் என்ற பின்னலாடை நிறு வனத்திற்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சேர்ந்த சகுந்தலா, கனகம் ஆகிய இடைத்தரகர்கள் மூலமாக வேலைக்காக முன்பணமாக ரூபாய் 20,000 பெற்றுக் கொண்டு இரண்டு சிறுமிகளை வேலைக்கு அனுப்பி உள்ளார்.இதனையடுத்து வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் குடவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் பாட்டி விஜயலட்சுமி, இடைத்தர கர்கள் சகுந்தலா மற்றும் கனகம் ஆகிய 3 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிறுமிகள் இருவரையும் தனிப்படையினர் மீட்டு திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குழுவினரிடம் ஒப் படைத்தனர். (ந.நி.)