tamilnadu

img

ஏப்.14 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணவசூல் செய்யத் தடை

தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 26-  கொரோனா வைரஸ் நோய் பர வலை தடுக்கும் வகையில் தமிழ கத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவு களும் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களு டன் தமிழக முதலமைச்சர்  காணொ லிக் காட்சி மூலம் மார்ச் 26 அன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.  இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, பின்வரும் உத்தரவுகள் பிறப் பிக்கப்பட்டுள்ளன. 

மார்ச் 31  வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்த ரவுகளும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகின்றது. ஊரடங்கு உத்தரவினால் ஏற் படக்கூடிய இடையூறுகளை தவிர்க்கவும், மக்களுக்குத் தேவை யான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைக்க வும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக் கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலை மையில் இப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

வங்கிகள் பண வசூலை நிறுத்துக!

பல கிராமங்களிலும், நகரங்களி லும் தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி / வாராந்திர / மாத வட்டி மற்றும் அசலை வசூல் செய் கின்றன. தற்போது, ஊரடங்கு உத்த ரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாத நிலையில், இதுபோன்ற பண வசூலை உடனடியாக, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த உத்தரவினை மீறு பவர்கள் மீது கடுமையான குற்ற வியல் நடவடிக்கைகள் தொடரப் படும் என எச்சரிக்கப்படுகின்றனர்.

மைதானங்களில்  காய்கறி கடை

பெரிய காய்கறி மார்க்கெட் / சந்தை இருக்குமிடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், காய்கறி / பழ வகை களை விற்கும் கடைகளை விசால மான இடங்களில் அல்லது மைதா னங்களில் அமைக்க வேண்டும். அப் போது மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளி லும் சமூக விலகல் முறையைத் தீவிர மாக பின்பற்ற வேண்டும். அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொது மக் கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங் கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூல மாக கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு

இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதை யும், இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்ப தையும், மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையும், நோய்த் தடுப்பு நட வடிக்கைகளையும் ஒலிபெருக்கி / தண்டோரா மூலம் பொது மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த நோய்த் தொற்று மிக மிகக் கடுமையானது என்பதையும், இது ஒரு ஆட்கொல்லி நோய் என்பதை யும், இது மனித சமுதாயத்திற்கு ஒரு பேரழிவை ஏற்படுத்த வல்லது என்ப தையும், மக்கள் உணரும் வண்ணம், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனையும், நோய்த் தடுப்பு நட வடிக்கைகளையும் ஒலிபெருக்கி / தண்டோரா மூலம் பொது மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலம் வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அத்தியாவசியப் பொருட் களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தி லும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்படும். இது தொடர்பான கோரிக்கைகள் இருப்பின், அவற் றிற்கான அத்தியாவசிய சான்றி தழை மாவட்ட ஆட்சியர்  மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்குவார்கள்.

மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்து வப் பணிகள் கழகம், அரசு மருத்து வமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள்  மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோர் வழங்குவர். 

அடையாள அட்டை

அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாக னங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல் லாத தனியார் பணியாளர்களுக்கும், சென்னை உட்பட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியா ளர்கள் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும்.

மின் வணிக நிறுவனங்களான க்ருபர்ஸ், அமேசான், பிக் பாஸ்கட், பிளிப்கார்ட்,டன்ஸோ  போன்ற நிறு வனங்கள் மூலம் மளிகைப் பொருட் கள், மருத்துவப் பொருட்கள் உள் ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பொருட்களை மற்ற நிறுவனங்க ளும், அந்தந்த பகுதியில் உள்ள மளி கைக் கடைகளும், கூட்டுறவு விற் பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட் களை வழங்க அனுமதிக்கப்படு கின்றது. 

ஸொமாட்டோ ,ஸ்விக்கி,உபேர் ஈட்ஸ்  போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட் களை வீடுகளுக்குச் சென்று வழங்கு வதற்கான தடை தொடரும். எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்க ளாகவே சமைக்க இயலாதோர் ஆகி யோர் மெஸ் மற்றும் சிறு சமையல கங்கள் மூலம் ஏற்கனவே தங்கள் உணவுகளை பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங் கப்படுகின்றது. 

இத்தகைய சேவைகளில் ஈடு பட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடை யாள அட்டை வைத்திருப்பதை சம் பந்தப்பட்ட வாகனங்களில் “அத்தி யாவசிய சேவைக்காக” என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.