கடலூர், ஏப்.12- மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம் கோரிக்கை விடுத் ததன் எதிரொலியாக நெல்லி குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை வருகிற 15 ஆம் தேதி முதல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் வே.அன்புசெல்வன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
கொரானா வைரஸ் தொற்றி லிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அரசு பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக அமல் படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு குறிப்பாக விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களை தொடர்ந்து நடத்துவதற்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தற் போது பரவலாக மணிலா மற்றும் உளுந்து, நவரைப் பருவ நெல் அறுவடை நடைபெற்று வருகி றது. இந்த விளைப் பொருட் களை விவசாயிகள் உரிய காலத்தில் விற்பனை செய்திட கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை துறையின் கீழ் செயல் படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் விவ சாயிகளின் நலன் கருதி இம்மாதம் 15ஆம் தேதி முதல் செயல்பட துவங்கும்.
விற்பனைக்காக வரும் விவ சாயிகள் பொது இடைவெளியை கடைபிடித்து வணிகம் செய்து கொள்ள வேண்டும். நெல்லிக்குப் பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை யும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வரும் 15ஆம் தேதி முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. எனவே, கரும்பு விவ சாயிகள் கரும்பு வெட்டும் போதும், அதனை ஆலைக்கு எடுத்து வரும்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகம் மேற்கொள்ளும் வழிமுறை களைப் பின்பற்றி ஒத்து ழைப்பு கொடுத்து கரும்பு அரவை செய்துகொள்ளவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆலை இயக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன் ஆகியோர் தனித்தனியாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.