சென்னை, நவ. 20- உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாக தேர்ந்தெடுப்பார்கள் என அவசர சட்டத்தை தமிழக அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது வன்மையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது:
மேற்கண்ட தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க தேவையான மக்கள் ஆதரவு தங் களுக்கு இல்லை என்ற காரணத்தினா லும், இம்முறையினால் அதிமுக பாஜக அணி தேர்தலில் படுதோல்வி யை சந்திக்க நேரிடும் என்ற கார ணத்தினாலும் தேர்தல் முறையையே மாற்றியமைக்க அதிமுக அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வகை செய்வதின் மூலம் கவுன்சிலர்களை கடத்துவதற்கும், குதிரை பேரம் செய்வதற்கும், தேர்தல் முடிவுகளை அதிகாரிகளைக் கொண்டு முறைகேடாக அறிவிப்பதற்கும் தான் இந்த அவசர சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே, தமிழக அரசு உடனடி யாக இந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்று, மீண்டும் பழைய முறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வை நேரடியாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், அவசரச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு கேட்டுக் கொள் கிறது.