tamilnadu

img

சிபிஎம் வெற்றி பெற்ற இடங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் திமுக கூட்டணி முன்னிலை

அவிநாசி, ஜன. 2- திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்த லில் சிபிஎம் உள்ளிட்ட திமுக கூட் டணி கட்சியினர் முன்னணியில் உள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் நடை பெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போத்தம்பாளையம் ஊராட்சி  3 வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.வேலுச்சாமி 251 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றார். இதேபோல், அதே ஊராட்சி யில் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட இந்தி ராணி 160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடுகபாளையம் ஊராட்சி 6 ஆவது வார்டு உறுப்பின ராக ராமசாமி, 9 ஆவது வார்டு உறுப் பினராக அய்யம்மாள் ஆகியோர் வெற்றி பெற்றனர். புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட குமார சாமி 102 வாக்குகள் பெற்று நான்கா வது முறையாக வெற்றி பெற்றார்.

உடுமலை

உடுமலை ஊராட்சி ஒன்றியம், செல்லப்பாளையம் 3ஆவது வார்டு  உறுப்பினர் பதவிக்கு போட்டி யிட்ட சிபிஎம் வேட்பாளர் பழனிச் சாமி வெற்றி பெற்றார். உடுமலை ஊராட்சி ஒன்றியம், சின்னவீரம் பட்டி 5 வது வார்டு உறுப்பினராக மாலினி வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி முன்னிலை

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி 13 மையங் களில் நடைபெற்றது. இதில்  மாலை 6 மணி நிலவரப்படி அவி நாசி ஒன்றியத்தில் மதிமுக-1, சுயேட்சை-4 வெற்றி பெற்றிருந்தது. தாராபுரம் ஒன்றியக்குழு உறுப்பி னராக 7 பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதில் திமுக-4, அதிமுக-2 மற்றும் சுயேட்சை யாகப் போட்டியிட்ட ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். குடிமங்கலம் ஒன்றியத்தில் திமுக-1, அதிமுக-2, காங்கேயத்தில் திமுக-3, அதிமுக-1, சுயேட்சை-1, குண்டடம் ஒன்றியம் திமுக-3, அதிமுக-2, பாஜக-1, மடத்துக்குளம் திமுக-3, அதிமுக-1, காங்கிரஸ்-1, தேமு திக-1, மூலனூர் ஒன்றியத்தில் திமுக-5, அதிமுக-1, பல்லடம் ஒன்றியம் திமுக-3, காங் கிரஸ்-1, சுயேட்சை-1, ஊத்துக்குளி  ஒன்றியம் திமுக-1, அதிமுக-3, சுயேட்சை-1, வெள்ளகோவில் ஒன் றியத்தில் திமுக-1, அதிமுக-1 ஆகிய இடங்களில் வெற்றிபெற் றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முடி வுகள் அறிவிக்கப்பட்ட 55 இடங் களில் 27 ஒன்றியத்தில் திமுக கூட் டணி கட்சியினர் வெற்றி பெற் றுள்ளனர். இதில் 15 இடங்கள் மட் டுமே பெற்று அதிமுக பின் தங்கி யுள்ளது.