tamilnadu

img

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி- உணவுப் பொருட்கள்

ஓரிரு நாட்களில் வழங்கி முடித்திடுக!

 

முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் மூலம் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 31- குடும்ப அட்டைதாரர்களுக்கு தமி ழக அரசு வழங்கும் கொரோனா நிவா ரண நிதி மற்றும் உணவுப் பொருட் களை ஓரிரு நாட்களில் வழங்கி முடிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ரூபாய் ஆயிரமும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட் கள் வழங்குவது என அறிவித்துள் ளது. வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளி லும் ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு வார காலம் அமலில் உள்ள சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் வேலையும் வருமானமுமின்றி தவித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவின் காரணமாக வெளிச் சந்தையிலும்  அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அரசு அறிவித் துள்ள நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் இதற்குள்ளாக வழங்கி முடித்திருந்தால் மக்களுக்கு ஓரளவு பயனளித்திருக்கும். தற் போது ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு 100 அட்டைதாரர்கள் வீதம் வழங்குவது என்பதனால் அனைவருக்கும் உதவித் தொகை யும் உணவுப் பொருட்களும் சென்ற டைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகக் கூடும். உதாரணமாக, ஒரு நியாய விலைக் கடையில் 1000 குடும்ப அட்டைகள் இருப்பின், அவர்களுக்கு உணவுப் பொருட்களும் நிதியும் கிடைக்க மேலும் பத்து நாட்கள் வரை ஆகலாம். இது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்க துவங்கிய வுடனே தேவை அதிகமாக இருப்ப தால் அனைவரும் கடைக்கு முன் திரண்டு உதவித் தொகையையும் உணவுப் பொருட்களையும் வாங்கு வதற்கு கூட்டமாகத் திரளும் வாய்ப்பு கள் உருவாகும். இதனால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, நியாய விலைக் கடையில் பணியாற்றும் ஊழியர் களுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும்.

சமூக விலகலும் ஊரடங்கு உத்த ரவு அமலில் இருக்கும் சூழலில் நியாய விலைக் கடை ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கடை களுக்கு தினம் சென்று வருவதிலும் பிரச்சனை உள்ளது. மேலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக பணிக்கு செல்வது கடி னமானதாக இருக்கும்.

வீடுவீடாகச் சென்று வழங்கினால் நல்லது

எனவே, அரசு வழங்குகிற உதவித் தொகை மற்றும் உணவுப் பொருட் களை ஒன்று அல்லது 2 தினங்க ளுக்குள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்குவதற்கான உரிய ஏற்பாட்டினைச் செய்திட வேண் டும். குறிப்பாக, வீடுவீடாகச் சென்று வழங்குவது மிகவும் நல்லது. ஒரு வேளை அது சாத்தியமில்லாதிருப் பின் தற்போதுள்ள நியாய விலைக் கடை ஊழியர்களோடு அரசு ஊழி யர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழி யர்கள் ஆகிய அனைவரையும் பயன் படுத்தி குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வழங்கி முடித்திடக் கேட்டுக் கொள்கி றோம்.

ஏற்கனவே, தமிழக அரசு அத்தி யாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களுக்கு ஒரு மாதச் சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவது என தீர்மானித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்க ஈடுபடுத்தப்படும் நியாய விலைக்கடை ஊழியர்கள், வரு வாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கும் இது போன்ற சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.