தமிழக அரசு அறிவிப்பு
சென்னை,ஏப்.2- தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக தமிழக அரசு அறி வித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் நோய் தமிழ்நாடு பொது சுகா தார சட்டம் 1939, பிரிவு 62ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள் ளது. பிரிவு 76ன் படி தமிழ் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897ன்படி வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்பட்டுள் ளன.
அரசு, தனியார் அலுவ லகங்கள், மருத்துவமனை கள், அடுக்குமாடி குடியி ருப்புகள், பள்ளிகள், கல்லூரி கள், திருமண மண்டபங்கள், பொழுதுபோக்கு பூங்காக் கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முத லான இடங்களில் பணிபுரிப வர்கள் மாணவர்கள் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகளை சோப்பு வைக்க வேண்டும்.
கட்டிடத்திற்குள் நுழை யும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை நன்கு கழுவிய பிறகே அனு மதிக்கவேண்டும். ஆய்வகங் கள், மருத்துவ மனைகள் மற்றும் மருத்து வர்கள் நோய் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத் திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வ மாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்க தவ றும் பட்சத்தில் அங்கீகாரம், அனுமதி ரத்து செய்யப்படுவ துடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவ்வப் பொழுது முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்த் தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.நோய்த்தொற்று நடவடிக்கை கள் எடுக்கத் தவறும் மருத்து வமனைகள் மீது சட்ட நட வடிக்கைகள் எடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட அறிவு ரைகளை கடைப்பிடிக்காத வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து 6 மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.