மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
திருநெல்வேலி மாவட்டம், கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ. நகரைச் சார்ந்த தோழர் அசோக் (23)இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப்பொருளாளராகவும், திருநெல்வேலி வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். இளம் வயதிலேயே கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர் தனது சொந்த கிராமத்திலும், திருநெல்வேலி வட்டத்தில் உள்ள பல கிராம மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர். அனைத்து சமுதாய மக்களின் தேவைகளை அறிந்து ஓடோடிச் சென்று பணியாற்றியவர். குடிநீர், சாலைவசதி, குடும்ப அட்டைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளுக்கு தொடர்ந்து குரலெழுப்பியவர். இரத்த தான முகாம் நடத்தியதுடன், தானும் ரத்த தானம் செய்தவர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் நடைபெற்ற போராட்டங்களில் கைதானவர். சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்கான இயக்கத்தை முனைப்புடன் நடத்தியவர்.
இளம் வயதிலேயே அனைத்துப் பகுதி மக்களாலும் அன்புடன் நேசிக்கப்பட்ட தோழர் அசோக் அவர்களை, சாதி வெறி பிடித்த சமூக விரோதிகள் கடந்த 12-6-2019 அன்று இரவு கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். தோழர் அசோக் அவர்களை இழந்து வறுமையில் வாடும் அவரது குடும்பத்தை பாதுகாப்பது நம் அனைவரது கடமையாகும்.
எனவே, தோழர் அசோக் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயமிக்க அனைத்து நண்பர்களும் தங்களால் இயன்ற நிதியினை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உதவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் வேண்டுகிறோம்.
நிதி அனுப்ப வேண்டிய விபரம்
SB A/C No: 418674546,
IFSC No: IDIB000T014,
Name: Communist Party of India (Marxist),
Tamilnadu State Committee,
Indian Bank, T.Nagar Branch, Chennai-17.
ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் தோழர்கள், நண்பர்கள் தங்களது பெயர், மற்றும் முகவரி, அனுப்பிய தொகை, இ.டிரான்ஸ்பர் ரெபரன்ஸ் நம்பர், வங்கி செலான் ஆகிய விபரத்துடன் “தோழர் அசோக் குடும்ப பாதுகாப்பு நிதி” என்று தலைப்பிட்டு கட்சியின் மின்னஞ்சலுக்கோ (cpimtn2009@gmail.com), பேக்ஸ் (044-24341294) மற்றும் கடிதம் மூலமாகவோ தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம். காசோலை மற்றும் வரைவோலை அனுப்புவோர் Communist Party of India (Marxist), Tamilnadu State Committee என்ற பெயருக்கு அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். மணியார்டர் மூலம் அனுப்புவோர் கட்சியின் மாநிலக்குழு முகவரிக்கு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு மாநிலக்குழு, 27, வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை - 600 017. போன்: 044-24341205, 24326800/ 24326900 பேக்ஸ்: 044 - 24341294 email: cpimtn2009@gmail.com) அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம்.
- கே.பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்