சென்னை, மார்ச் 18- கொரோனா வைரஸ் எதிரொலியாக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை காண வரும் பார்வையாளர்க ளுக்கு தடை வித்திக்கப் பட்டது. மேலும், தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு (மார்ச் 17) முதல் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், காவலர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள், அங்கீ கரிக்கப்பட்ட பத்திரிகை யாளர்கள் மட்டுமே புதன் கிழமை (மார்ச் 18) அனுமதிக் கப்பட்டார்கள்.
தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வந்த உணவகங்கள் மற்றும் கடை கள் அனைத்தும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை யாக மார்ச் 22 ஆம் தேதி வரைக்கும் மூடப்பட்டுள் ளன. சட்டமன்றக் கூட்டம் நடந்து வரும் இவ்வேலை யில் உணவகங்கள் மற்றும் கடைகளும் மூடப்பட்ட நிலை யில், கூட்டுறவு சங்க உண வகம் மட்டும் இயங்கியதால் கூட்டம் அலைமோதியது. இதனால் தலைமைச் செய லக ஊழியர்கள், காவல் துறையினர், செய்தியாளர் கள் என பலரும் பெரும் சிர மத்திற்குள்ளானார்கள். உணவுக்காக படாதபாடு பட்டனர்.