சென்னை,அக்.10- சென்னையில் பேனர் விழுந்து நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அவரின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத் தில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வில், கடந்த மாதம் 18 ஆம் தேதி பல்லாவரம் -துரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அனுமதி யின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் இருசக்கர வாகனத்தில் சென்ற தனது மகள் சுபஸ்ரீயின் மீது விழுந்த தில் அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. சட்டவிரோதமாக பேனர் வைத்ததை அதிகாரிகள் தடுக்கா ததே தனது மகளின் உயிரி ழப்புக்கு காரணம் என்றும் சட்ட விரோத பேனர்களை அகற்ற சட்டம் இருந்தும் அதனை அரசு அதிகாரிகள் முறையாக செயல் படுத்தவில்லையென அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தனது மகளின் மர ணம் தொடர்பாக சிறப்பு புல னாய்வுக் குழு அமைக்கவும், மகளை இழந்து வாடும் தங்க ளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செப்டம் பர் 24 ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவர தமி ழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் ரவி மனுவில் கோரி யுள்ளார். இந்த மனு மீதான விசா ரணை அக்டோபர் 10 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணை யின்போது குறுக்கிட்ட நீதிபதி, சீன ஜனாதிபதி வருகிறார் என்ற தும், சென்னை மாநகரே சுத்தமாக உள்ளது. தினமும் தமிழகத்துக்கு மற்ற உலகத் தலைவர்கள் வந்தால், எப்போதுமே சுத்தமாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரி வித்துள்ளார்.