tamilnadu

img

அரபிக் கடலில் ‘கியார்’

சென்னை,அக்.25- அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. இந்த புய லுக்கு கியார் என்று பெய ரிடப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாகவும், 24 மணி நேர த்தில் அதி தீவிர புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள் ளது.  இது தொடர்ந்து வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் காரணமாக தமிழகத்துக்கு எந்த பாதிப் பும் இருக்காது என்று கூறப் படுகிறது.