tamilnadu

img

530 மருத்துவர்கள் 1,000 செவிலியர்கள் நியமனம்

சென்னை, மார்ச் 27- தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களில் புதியதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் விதிகளுக்குட் பட்டு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஆணை கிடைத்தவுடன் மூன்று தினங்களுக்குள் அவர்கள் பணியில் சேர அறிவுறுத்தல். மேலும் 200 ஆம்புலன்ஸ்களையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு உத்தரவு.