tamilnadu

img

முதுகில் குத்திய அதிமுக, பாமக.... கே.எம்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

நாட்டு மக்களின் மனசாட்சியாக தமிழக எம்.பி.,க்கள் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து அதிமுக, பாமக இரு கட்சிகளும் தமிழர்களின் முதுகில் குத்தி உள்ளன. இதனைக் கண்டித்து டிசம்பர் 18 அன்று தமிழக முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட உள்ளோம். கோல்வால்கரின் கொள்கைகளை அமல்படுத்துவதன் தொடக்கம்தான் குடியுரிமை சட்டத் திருத்தம். மாநிலங்களை ஒழித்துகட்டிவிட்டு 200 ஜன்பத்துகளை உருவாக்கப் போகிறார்கள். அசாமில் நிறைவேற்றிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதையும் அமல்படுத்த உள்ளனர். அதனை அமல்படுத்தினால் மதச்சார்பற்ற இந்தியா ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும். பாஜகவை வீழ்த்தும்.