tamilnadu

img

ஏமனிலிருந்து தப்பிய 9 தமிழக, கேரள மீனவர்கள்

உணவின்றி கடலில் ஒருமாதம் தவித்தவர்கள் மீட்பு

கொச்சி, டிச. 2- கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் துறையைச் சேர்ந்த சேர்ந்த ஜே.வின்ஸ்டன் (47), ஆல்பர்ட் நியூட்டன் (35), ஏ.எஸ்கலின் (29), பெரியகாடைச் சேர்ந்த பி.அமல் விவேக் (33), மணக்குடி யைச் சேர்ந்த ஜே.சாஜன், குளச்சலைச் சேர்ந்த எஸ்.சகாய ஜெகன் (28) நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த பி.சகாய ரவிக்குமார், கொல்லத்தைச் சேர்ந்த நவுஷாத் (41), நிஸார் (44)  ஆகியோரை வெள்ளியன்று கடலில் இருந்து மீட்டு கொச்சிக்கு கடற்படை யினர் கொண்டு வந்தனர். பசியும் தாகமும் தாங்கியபடி மீன்பிடி படகில் 3069 கிலோமீட்டர் உயிரை பண யம் வைத்து இவர்கள் பயணித்துள்ள னர்.

2018 டிசம்பர் 3 அன்று ஷார்ஜா வில் ஒரு அரபியிடம் மீன்பிடி தொழி லாளர்களாக இவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால், இவர்களை அழைத்துச் சென்றவர் ஏமனைச்சேர்ந்த மற்றொருவரிடம் ஒப்படைத்துள் ளார். மீன் பிடிக்க இயந்திரம் பொருத் தப்பட்ட மூன்று படகுகள் கொடுத்துள் ளனர். ஆனால், பிடிக்கும் மீனுக்கான பங்கோ கூலியோ அவர்களுக்கு வழங்க வில்லை. பல நாட்கள் ஒருவேளை உணவுகூட வழங்கவில்லை என இவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தனர். தங்களை விடு வித்து நாடுதிரும்ப அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்ட போதும் உரிமை யாளர் அவர்களை அனுமதிக்க வில்லை. இறுதியாக நவம்பர் 19 அன்று  படகில் தப்பி வர முடிவு செய்தனர். 27  அன்று லட்சத்தீவு பகுதிக்கு வந்தடைந்த னர். படகுக்கு தேவையான எரிபொ ருள் இல்லை எனவும் உணவு இல்லா மல் தளர்ந்துவிட்டதாகவும் குடும்பத் தினரிடம் தெரிவித்தனர். அன்பிறகு அவர் களிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்க வில்லை. கடலில் சிக்கிய மீன் தொழி லாளர்களை காப்பாற்றுமாறு தெற்கு ஆசிய மீன் தொழிலாளர் கூட்டமைப்பு கடலோர காவல்படைக்கு கடிதம் அளித்தது.  

கடலோர காபல்படையினர் மணக் குடி சாஜனின் வீட்டுக்கு சென்று விவ ரங்களை கேட்டறிந்தனர். படகில் எரிபொருளும் உணவும் தீர்ந்து விட்டதாகவும், கொச்சி கடற்கரையை வந்தடைய முடியாது எனவும் 27 ஆம் தேதி ஷாஜன் கூறியதாக அவரது மனைவி சபீதா தெரிவித்துள்ளார். வியாழனன்று விமானம் மூலம் நடத்திய தேடுதலில் கொச்சியிலிருந்து 185.2 கிலோமீட்டர் மேற்கே படகு இருப்பது தெரியவந்தது. அவர்களை கடலோர காவல்படையின் ஆரி்யன் கப்பலில் மீட்டு கொச்சிக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத் துறையினர் விசாரணை நடத்திய பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்த னர். போர்ட் கொச்சி கடற்கரை காவல் துறையிடம் படகு ஒப்படைக்கப்பட்டது.  

கேரள அரசுக்கு நன்றி தமிழக அரசு உதவ கோரிக்கை

திங்களன்று தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினரும், மீண்டு வந்த குமரி மாவட்ட மீனவ குடும்பத்தினரும் திங்களன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து நன்றி கடிதம் அளித்தனர். அதில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படைக்கும், அதற்கு உழைத்த கேரளாவின் கடலோர காவல் அதிகாரிகளுக்கும், கொச்சின் மாநகர காவல் ஆணையருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், மீனவர்கள் பல லட்ச ரூபாய் செலவு செய்து வெளிநாட்டுக்கு நம்பிக்கையோடு வேலைக்கு போய் ஏமாற்றப்பட்டுள்ளனர்; இனி அவர்கள் வெளிநாடு செல்வதற்கு இயலாது; எனவே மீனவர்களின் குடும்பங்களை பாதுகாக்க உள்ளூரிலேயே மீன்பிடிக்கச் செல்ல வேண்டியுள்ளது; ஆகவே  தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து தமிழகத்தில் மீன்பிடி தொழில் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.