சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 117 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.