சிவகங்கை:
பிரான்மலையை உடைப்பதைக் கண்டித்தும், பிரான்மலையைச் சுற்றிசட்டவிரோதமாக வழங்கப்பட்ட பட்டாக் களை ரத்துசெய்ய வேண்டும். பிரான்மலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட் டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் காந்திமதி சேதுராமன் , மாவட் டக்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருப்புசாமி, இளையராஜா, பரம்பு மலை பாதுகாப்பு இயக்கபொறுப்பாளர் கர்ணன், பாரூக், சிபிஐ நகர் செயலாளர் கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பத்தூரில் கண்ணகி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மோகன் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், முருகேசன், பீர்முஹமது, பி.எல்.மாணிக்கம் மற்றும் நாச்சியப்பன், முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். காளையார்கோவிலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் திருநாவுக்கரசு, முத்துராஜா, சிபிஐ சார்பில் கோபால், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வெற்றி விஜயம், பன்னீர், முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.காரைக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்சின்னக்கண்ணன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ராஜ்குமார், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சங்குஉதயகுமார், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சித்திக் உள்ளிட்ட பலர் கொண்டனர்.சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, திருப்புவனத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.