அகமதாபாத், மே 21- குஜராத்தில் கொரோனா தொற்றால் 12,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 749 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று உயிரிழந்தவர்கள் 351 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டவர்கள் ஆவர். இந்த மருத்துவ மனை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாகும். கொரோனா வைரசுக்கென 1,200 படுக்கைகள் இங்கு உள்ளன. இதுகுறித்து அகமதாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கயாசுதீன் ஷேக், “அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அதிக இறப்புகள், குறைந்தளவு நோயாளிகளே குண மாகிச்சென்றுள்ளது குறித்து கேள்வி யெழுப்பினார். இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி) தலையிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.