tamilnadu

img

பெண்ணை அடித்து உதைத்த குஜராத் பாஜக எம்எல்ஏ!

அகமதாபாத்:
குடிநீர் வசதி கேட்டு மனுகொடுக்க வந்த பெண்ணை, குஜராத் பாஜக எம்எல்ஏ ஒருவர், நடுரோட்டில் அடித்து,உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தின் நரோடா பகுதியையொட் டிய, குபேர் நகருக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அங்கு இயங்கிவரும் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. அதேநேரம், அங்குள்ள மாயா சினிமாஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களுக்கு தங்குதடையின்றி நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, குபேர் நகர் பகுதியைச் சேர்ந்த நீத்து தேஜ்வானி என்ற பெண்தலைமையில் ஏராளமானோர், பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி வீட்டு முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அலுவலகத்திற்கு சென்றும் மனு அளித்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி, தனது ஆதரவாளர் களுடன் சேர்ந்துகொண்டு, நீத்து தேஜ்வானியையும் அவரது கணவரையும் சரமாரியாக அடித்துத் தாக்கியுள்ளார். காலால் எட்டியும் உதைத்துள்ளார். நடுரோட்டில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானி தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார்.