அகமதாபாத்தில் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் 5-6 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் பட் கூறியதாவது:-
கட்டிடத்தின் 5 - 6-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என கூறினார்.