ஐபிஎல் தொடரின் 12-வது சீசனில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டியை மட்டும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். சென்னை அணி பங்குபெறும் போட்டிஎந்த நகரத்தில் நடந்தாலும் ரசிகர்கள்அந்த நகரத்திற்கு டிக்கெட் வாங்கக்கிளம்பி விடுகின்றனர். வெள்ளியன்று நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற் பனை புதனன்று தொடங்கியது.டிக்கெட் வாங்குவதற்காக அதிகாலை முதலே போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதான வளாகத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை.ஒருகட்டத்தில் தடுப்புகள் உடைந்து ரசிகர்கள் கீழே விழுந்தனர். பொறுமையிழந்த காவல்துறை யினர் ரசிகர்கள் மீது லேசான தடி யடி நடத்திக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். டிக்கெட் கவுன்டரில் இருந்தவர்கள் பெரும்பாலும் மாணவர்கள்ஆவர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் சேப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.