கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் சென்ற 10,000/-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் கூறியிருப்பது,அரசு பேருந்துகளில் முறையாக பயணச்சீட்டு எடுக்காமல் செல்வது மோட்டார் வாகன சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.இந்நிலையில் போக்குவரத்து கழக பயணச்சீட்டு பரிசோதகர்களை கொண்டு அவ்வப்போது சோதனை நடத்தி வந்தது.இதில் கடந்த மூன்று மாதங்களில் நடந்த சோதனையில் 10,000/-த்திற்கும் மேற்பட்டோர் பயண சீட்டு எடுக்காமல் சென்றதாகவும்,அவர்களிடம் அபராதம் ரூபாய் 500/- என சுமார் 16 லட்சத்திற்கும் மேல் வசூல் ஆகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் இனி வரும் காலங்களில் இந்த நடைமுறை தொடரும் எனவும்,பொதுமக்கள் சரியான முறையில் பயணச்சீட்டு வாங்கி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.