tamilnadu

img

கொரோனா பீதி - உக்ரைன் பயிற்சி முகாம் ரத்து

கொரோனா பீதி

புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வருகிறது. சீனாவில் பலத்த சேதா ரத்தை ஏற்படுத்தி தற்போது தென் கொரியா, ஈரான், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் அடுத்தகட்ட ஆட்டத்தைத் தொடங்க தயார் நிலையில் உள்ளது.  இந்த கொடிய வைரஸ் பரவல் காரணமாகக் கிழக்கு ஆசிய நாடுகளில் பல்வேறு விளையாட்டுத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், ஜப்பானில் வரும் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரும் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், ஜப்பான் ஒலிம்பிக் தொடருக்காக உக்ரைனில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க விருந்த இந்திய மல்யுத்த வீராங்கனைகள் ஹரிஷ் போகட் (53 கிலோ) வினிஷ் நிர்மலா (50 கிலோ), அன்சு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), திவ்யா (68 கிலோ), கிரண் (76 கிலோ) ஆகியோர் கொரோனா வைரஸ் அச்சத்தால் விலகி உள்ளனர். இதன் கார ணமாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு லக்னோவில் பயிற்சி பெறுவார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது.