tamilnadu

img

அந்தியூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஈரோடு, ஜூன் 15- அந்தியூர் ஊராட்சியில், பொதுமக் களுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டு வதைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட்  கட்சி உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர் கள் ஒன்றியக்குழு அலுவலகத்தில்  திங்களன்று உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிபிஎம் கவுன்சி லர் ஜி.மயில்சாமி கூறுகையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 15 வது மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ. 1 கோடியே 32 லட்சம் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நி லையில் திமுக மற்றும் சிபிஎம் கவுன் சிலர்கள் உள்ள 7- வார்டுகளுக்கு தலா ரூ. 3 லட்சம் மட்டுமே வளர்ச்சிப் பணிக ளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து, ஆளும் கட்சியினர் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சி யர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்களுக்கு பல முறை மனு அளித்தும் தற்போது வரை எந்தவொரு நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை.  எனவே, இவ்விசயத்தில் தமிழக அரசும், ஈரோடு மாவட்ட ஆட்சியரும் நேரடித் தலையீடு செலுத்தி அனைத்து ஊராட்சி ஒன்றிய வார்டு பொதுமக்க ளுக்கும் சமமான வளர்ச்சிப் பணி களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டு உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, அந்தியூர் ஊராட்சி யில் திங்களன்று நடைபெற்ற ஒன்றி யக்குழு கூட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன் சிலர் ஆகியோர் உள்ளிட்ட 7 பேர்  ஆளும் கட்சியின் இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரா ஜக நடவடிக்கையை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண் டனர்.