tamilnadu

img

காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

ஈரோடு, மார்ச் 19- கொரோனா வைரஸ்  காய்ச்சல் பரவுதலை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக காய்கறி சந்தை யில் கிருமி நாசினி தெளிக் கும் பணி நடைபெற்று வருகி றது. மேலும், வாரசந்தையும் மூடும் அபாயம் உள்ளதால் காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதும் 9 ஆயிரம் பேர் உயிரி ழந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது  வரை 4 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் காய்ச்சல் பரவாமல் தடுக்க  மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது இதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்க ளான தியேட்டர், மால், நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்விதத்திலும் பாதிப்ப டையாமல் இருக்க உணவுப்பொருட்கள் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நி லையில் ஈரோடு மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையான நேதாஜி சந்தைக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே தடுப்பு நடவடிக்கையான லாரிகள் மற்றும் காய்கறி சந்தையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தைகளும் மூடும் அபாயம் உள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலத்தில் நடந்த வாரசந்தையில் பொருள்களை வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் கிலோ  ரூ.5க்கு விற்கப்பட்ட தக்காளி கொரோனா காரணமாக ரூ.15க்கு விற்கப்பட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.50 ஆக உயர்ந்தது. பூண்டு  கிலோ ரூ.100 ஆக உயர்ந்தது. சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்புசக்தியை அதிக ரிக்கும் என்ற தகவலால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.