tamilnadu

img

உளவியல் ரீதியாக மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை திணிக்க பார்க்கிறது

ஈரோடு, ஜூலை 16- உளவியல் ரீதியாக தேசிய கல்விக் கொள்கையை பாஜக அரசு திணிக்கப் பார்க்கிறது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு கல்வி உரிமை பாது காப்பு கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நா.மணி எழுதிய ‘இந்திய கல்வியின் இருண்ட காலம்’ என்ற நூல் குறித்த கருத்தரங்கு திங்களன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் நிர்வாகி என்.நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், புதிய கல்வி கொள்கை குறித்து, ஆசிரியர்களுக்கே புரியவில்லை. அனைவருக்கும் சமமானதாக இல்லாத, கல்வி கொள்கையின் ஆபத்தை உணர வேண்டும் என்றார். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஸ்ரீவித்யா பேசுகையில், புதிய கல்வி கொள் கையில், பெண் கல்வி பற்றி எதுவும் இல்லை. உயர்கல்வியை இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்ற சிந்தனை இல் லாமல், கல்வி விற்பனையை நோக்கியதாக அமைந்துள்ளது. ஒரே தேசம், ஒரே மொழி என ஒரே கல்வி என்பதை திணிப்பது போன்றதாக அமைந்துள்ளது. ஆனால், பல மாநிலம், பல மொழி,  இனங்களை நாம் கொண்டுள் ளோம், என்பது மறைக்கப்பட் டுள்ளது என்றார்.  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச் செயலாளர் செ.நடேசன் பேசுகையில், அந்தந்த மாநிலங்களின் தன் மைக்கு ஏற்ப, சமமான வளர்ச்சி  அனைவருக்கும் கிடைக்க வேண் டும் என்ற சிந்தனையுடன் கல்வி கொள்கை அமைக்கப்பட வேண் டும். கல்வி கொள்கையை கல் வியாளர்கள், கல்வி செயல்பாட் டாளர்கள் தான் ஏற்படுத்த வேண்டும்.  புதிய கல்வி கொள்கையின் சரத்துக்கள், உளவியல் ரீதியாக கல்வியை திணிக்கப்பார்க்கிறது. இக்கல்வி கொள்கையை படித்து, புரிந்து கருத்து தெரிவிக்க அவ காசம் வழங்க வேண்டும். இவ் வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க நிறுவனர் அ.செ.கந்தசாமி, பேராசிரியர் மணி, கலைக்கோவன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.