tamilnadu

img

சஞ்சீவராயன் ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபி, அக்.20- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சஞ்சீவராயன் ஏரி6 ஆண்டு களுக்கு பிறகு தற்போது நிரம்பியுள்ளதால் உபரிநீர் வெளி யேறி வருகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் வனப்பகுதியை ஒட்டி சுமார் ஆயிரம் மீட்டர் பரப்பளவில் சஞ்சீவராயன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை தமிழக அரசின் குடிமராமத்து பணியின் மூலம் தூர் வரி கரைகள் ஆழப்படு த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக பெய்து வரும் தொடர் மழையினால் சஞ்சீவராயன் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான கரும்பாறை தொட்ட கோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் வழிந்தோடிய மழை வெள்ள நீர் சஞ்சீவராயன் ஏரிக்கு வந்தடைந்து தற்போது முழு கொள்ளவாக 16 அடியை எட்டியுள்ளது. இதனால் ஏரிக்குவரும் உபரிநீர் முழுவதும் சஞ்சீவராயன் உபரிநீர் ஓடையில் வெளியேளி வருவதால் சைப்பன்புதூர் வளையபாளையம் கரும்பாறை பெருமுகை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்க ளுக்கு வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது. மேலும் உபரிநீர் ஓடையில் இறங்கி மீன் பிடிக்கவோ கால்நடை களை மேய்க்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் இனி வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தேவையும் விவசாய நீர் தேவையும் பூர்த்தியாகியுள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரி வித்துள்ளனர். அதேநேரம், சஞ்சீவ ராயன் ஏரிக்கு வரும் நீர் வழிப் பாதையில்அமைந்துள்ள தரை மட்டப் பாலம்மூழ்கியுள்ளதால் அவ்வ ழியாக செல்லும் பொது மக்கள் மற்றும்விவசாயிகள் அவதியடை ந்துள்ளனர். அதனால் அந்த தடை மட்டப்பாலத்தை மட்டும் உயர்த்தி கட்டித்தர வேண்டும்என தமிழக அரசுக்குஅப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.