tamilnadu

img

தேச ஒற்றுமை- மத நல்லிணக்கம்- சகோதரத்துவம் காப்போம் குடியரசு தினத்தையொட்டி மனித சங்கிலி

ஈரோடு, ஜன. 26-  ஈரோடு மாவட்டம், புளியம்பட் டியில் 71 ஆவது குடியரசு தினத்தை  முன்னிட்டு 2 கிலோமீட்டர் நீள முள்ள நீண்ட தேசிய கொடியை கையில் ஏந்தி பொதுமக்கள் மனித சங்கிலி இயக்கத்தில் ஈடுபட் டனர். ஈரோடு மாவட்டம், புளியம் பட்டி விடியல் சமூகநல அறக்கட் டளை சார்பில் 71 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியர்கள் மற்றும்  பொதுமக்கள் இடையே தேசப் பற்று, தேச ஒற்றுமை, மத நல்லி ணக்கம், சகோதரத்துவம் ஆகிய வற்றை வலியுறுத்தி மனித சங்கிலி  நடைபெற்றது.   புன்செய் புளியம்பட்டியில் முதல் முறையாக நீளமுள்ள மிக  நீண்ட இந்திய தேசிய கொடியை  கையில் ஏந்தி பள்ளி, கல்லூரி  மாணவர்கள், ஆசிரியர்கள்  மற்றும் பொதுமக்கள் பிரம் மாண்ட மனித சங்கிலியை அமைத்தனர். இந்த மனித  சங்கிலியானது புளியம்பட்டி டானா புதூர் நால் ரோட்டில் தொ டங்கி கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலை வில் நிறைவடைந்தது. இந்த மனித சங்கிலியில் விடி யல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் இயக்குனர்கள் சதீஸ் குமார், ரமேஷ்குமார் மற்றும் புளி யம்பட்டி பகுதியை சார்ந்த அரசு பள்ளி, கல்லூரி பேரா சிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.