tamilnadu

img

நிர்பயா தினம்: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடுக சிஐடியு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு,டிச.16- டிசம்பர் 16- நிர்பயா தினத்தையொட்டி பெண்கள், குழந்தைகள் மீது அதிகரிக்கும் வன்முறைகளை தடுக்கக்கோரி சூரம்பட்டி அருகே சிஐடியுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வர்களை உடனடியாக கைது செய்ய வேண் டும். பணியிடங்களில் பெண்களின் பாலி யல் புகார்களை விசாரிக்க புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பாலியல் வன்முறை யால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைக ளுக்கு உரிய நிவாரணமும், உதவியும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சிஐடியு) ஈரோடு சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் தலைமை வகித் தார். மாநில துணைத் தலைவர் ஆர்.சிங் காரவேலு கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்பி ரமணியன்,மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் பி.எஸ்.பிரசன்னா உட்பட பலர் பங் கேற்றனர்.