ஈரோடு, ஜூலை 9- பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட் டத்தை அமலாக்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) சார்பில் ஈரோடு மாவட்ட தலைவர் எஸ்.சுப் பிரமணி, செயலாளர் எச்.ஸ்ரீராம் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள் ளதாவது, பெருந்துறை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில் கிரிஸ்டல் என்னும் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய் யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலை யில், சமீபத்தில் 220 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்தனர். ஆனால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் மிகக் குறைந்த சம்பளமே வழங்கப் பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஜுன் 18 ஆம் தேதி வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னைத்தொடர்ந்து பெருந்துறை வட் டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது, இரண்டொரு நாட்களுக்குள் குறைந்த பட்ச ஊதியமான ரூ.480ஐக் கொடுத்து விடுவதாக கிரிஸ்டல் நிறுவனம் உறு தியளித்தது. ஆனால், இதற்கு மாறாக ஜூன் மாத முடிவு வரை ஊதியம் வழங் காமல் இருந்து வருகிறது. எனவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.