tamilnadu

img

கோபியில் குடிமராமத்துதிட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாருதல் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு

கோபி, ஜூன் 19- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி மற்றும் எலத்தூ ரில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் குடிம ராமத்துதிட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படுவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் விவசாயி களிடம் ஆலோசனை மேற்கொண் டார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள மூணாம் பள்ளி மற்றும் எலத்தூர் பேரூராட்சி களில் ஏரிமற்றும் குளங்கள் குடிமரா மத்துதிட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. இக்குளங்களை ஆழப்படுத்தி கரைகள் பலப்படுத் தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் குளத்தில் உள்ள வண்டல் மண்களை விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள் ளதால் ஏராளமான விவசாயிகள் வண் டல் மண்களை எடுத்துச் சென்று வரு கின்றனர்.

இப்பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நேரில் ஆய்வு மேற் கொண்டு குளங்கள் ஆழப்படுத்துவது குறித்தும், கரைகள் பலப்படுத்துதல் மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப் புகள் அகற்றுதல் போன்ற செயல்பா டுகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் ஆலோசனை நடத் தினார்.  இந்நிகழ்வில் கோட்டாட்சியர் ஜெயராமன், தாசில்தார் வெங்கடேஸ் வரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.