ஈரோடு, மார்ச் 16- கொரோனா காய்ச்சல் உலகம் முழுவதும் வேக மாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதி கரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்தியா விலும் இதனை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒருபகுதியாக ஈரோடு மாவட்ட எல்லைகளில் உள்ள திரையரங்கு கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும் பவானிசாகர் அணை, கொடிவேரி தடுப் பணை அருவி ஆகியவைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் கைகளை கழுவிய பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர். மேலும், கொரோனா காய்ச்சல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.