tamilnadu

அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் ஆட்சியரிடம் கவுன்சிலர்கள் புகார்

ஈரோடு, ஜூன் 2- அந்தியூர் ஒன்றியத்தில் பொதுமக்களுக்கான அடிப் படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்குவதில் ஆளுங்கட் சியினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்து திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சில் வார் டுகள் உள்ளன.

இங்கு வசிக்கும் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர், பொது சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட ரூ.1 கோடியே 32 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட் டது. இந்நிலையில், அதிகாரத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சார்ந்த  9 ஒன்றிய வார்டு களுக்கு ரூ.1 கோடியே 11 லட்சமும், திமுக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் 7 கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் தலா ரூ.3 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.21 லட்சம் அளவிற்கு மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளனர். இத்தகைய செயல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்க்கட்சிக் கவுன்சிலர் வார்டுகளில் உள்ள பொதுமக்களை புறக்க ணிக்கக்கூடிய பாரபட்சமான நடவடிக்கைக்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சேபத்தை தெரிவித்து  அந்தியூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கவில்லை.  எனவே, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 ஒன்றிய வார்டுகளுக்கும் சம மாக நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டு மென அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சி லர் இராஜலட்சுமி, சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் ஜி.மயில் சாமி, திமுக அந்தியூர் ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடா சலம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச் சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து, அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், திமுக பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகி நாகேஸ்வரன் ஆகி யோர் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.