திண்டுக்கல், மே 11- ஈரோட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த துப்புரவு பணியாளர் குடும்பத்துக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என்று சிஐடியு கேட்டுக்கொண் டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் கே.ஆர்.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வைரஸ் பாதிப்பு காரணமாக உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தமி ழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றை எதிர்த்து தூய் மைப் பணியாளர்கள் சிறப்பான முறையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணி புரிந்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர் களை பல ஊர்களில் மக்கள் பாராட்டி கௌரவித்து வரு கின்றனர். மதுரை திருமங்கலத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் காவல்துறை கௌரவம் செலுத்தி யுள்ளது. ஆனால் தூய்மைப் பணி யாளர்கள் துயரம் போக்க பட வில்லை. எனவே செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு வேலை துவங்கும் முன்பு அல்லது காலை பணி முடிந்து திரும்பும் நேரத்தில் அந்தந்த டிவி ஷன், மண்டல, நகராட்சி, பேரூ ராட்சி, அலுவலகங்கள் முன்பு கோரிக்கை பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி விட்டு வேலைக்கு செல்வது என முடிவு செய்யப்பட் டுள்ளது. தினக்கூலி, ஒப்பந்த, சுய உதவி குழு துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 600 வழங்கிட வழங்கிட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும், வைரஸ் தொற்று பாதிப்பால் சேலம் ஈரோட்டில் இறந்துபோன துப்புரவு தொழிலாளி குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மே 12ஆம் தேதி மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போராட்டங்கள் நடத்த வேண்டும் என கணேசன் கேட்டுக் கொண் டுள்ளார்.