tamilnadu

img

நலவாரிய குளறுபடிகளை களையக் கோரி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:
நலவாரியத்தில் நடைபெறும் குளறுபடிகளை களையக் கோரி திண்டுக்கல் மாவட்டநலவாரியம் முன்பாக சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முறைசாராத் தொழிலாளர் களுக்கு தமிழக அரசு அறிவித்த கொரான கால நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். விடுபட்ட அனைவருக்கும் காலதாமதமின்றி வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுக்கு லாக் இன் ஐடி வழங்க வேண்டும். மாவட்டக் கண்காணிப்புக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியுமாவட்டத்தலைவர் கே.பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஆர்.கணேசன். ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக பி.முருகேசன், ஆர்.பால்ராஜ், கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார் பாக எம்.முருகேசன், தீத்தான், சிறுமணி, பாலசுப்ரமணியம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக வளர்மதி, ராஜ், பிச்சைமுத்து (சுமைப்பணி தொழிலாளர் சங்கம்), சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பாக தனசாமி, பெருமாள், சேகர்(கைத்தறி), தென்னை மரத் தொழிலாளர் சங்கம் சார்பாக அழகர்சாமி, குணசீலன், தவக்குமார் (தோல்பதனிடும் தொழிலாளர் சங்கம்) ஆகியோர் பங் கேற்றனர்.