சின்னாளபட்டி, ஜூலை 6- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேருராட்சி நிர்வாகம் துப்புரவு பணியா ளர்களின் வயிற்றில் அடிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வி.கே.முருகன் ஒன்றியச் செய லாளர் சூசை மேரி ஆகியோர் குற்றம்சாட்டி யுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: சின்னாளபட்டி பேரூராட்சி துப்புர வுப் பணியாளர்களின் மாதாந்திர சம்ப ளத்திற்கான பில்லை வழங்குவதில்லை. சொந்தத் தேவைக்காக வங்கிகள் கடன் பெற்றதற்காக ரூ.10,0000 பிடிப்பதாக கூறு கிறார்கள். பணம் வங்கிக்கு முறையாகச் சென்றதா எனத் தெரியாமல் துபபுரவுப் பணி யாளர்கள் தவிக்கிறார்கள். துப்புரவுத் தொழி லாளர்களுக்கு பி.எப். பிடித்துக்கொண்டி ருக்கிறார்கள். அந்த விபரமும் பணியாளர் களுக்கு தெரியவில்லை. துப்புரவுப் பணியாளர்களுக்கு முகக்கவ சம், கையுறை வழங்குவதில்லை. சுய உத விப் பெண்களுக்கு ரூ. 503 சம்பளம் வழங்க வேண்டும். அரசு உத்தரவை மதிக்காமல் ரூ.350 தான் வழங்கப்படுகிறது. குடிநீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் வரு கிறது. காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சின்னாளபட்டி பேருராட்சியை இணைக்க சொல்லி சட்டமன்ற உறுப்பினர் ஐ பெரிய சாமி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து இன்றளவும் இணைக்கபடவில்லை. குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல் லாததால் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் கொட் டப்படுகிறது. துப்புரவுப் பணியாளர் களுக்கென்று உள்ள சுடுகாட்டில் குப்பை கள் கொட்டப்படுவதால் அவர்கள் இறந்த உடல்களை புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி செயல் அலு வலர் கூறுகையில், “சம்பள பில் வழங்கு வதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். மற்ற கோரிக்கைகளை விரைவில் நிறை வேற்றப்படும்” என்றார்.