tamilnadu

பட்டா கேட்டு அய்யலூர் மக்கள் மறியல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

திண்டுக்கல், மார்ச் 18- திண்டுக்கல் அய்யலூர் அருகேயுள்ள எஸ்.கே.நகர் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக அங்கே குடியிருந்து வருகிறார்கள். 100 குடும்பங்கள் வசிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பல கட்டப் போராட்டங்கள் நடத்தி இவர்களுக்கு 2012-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பட்டாக்கள் கிராம நிர்வாககக் ஏற்றவில்லை. இதனால் இவர்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் இருளில் மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் நிலை தொடர்கிறது. வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் ஏற்றாததால் வழங்கப்பட்டத பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் பட்டா வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால் பட்டா கொடுக்க அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.  அதேபோல, நாகப்ப பிள்ளையூர் மக்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை. அரசு ஒப்பந்தப் புள்ளி அறிவித்தும் சாலை அமைக்கப்படவில்லை. இத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மற்றும் அதிகாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.  எஸ்.கே.நகர் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும். நாகப்ப பிள்ளையூருக்கு சாலை வசதி செய்துதர வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் டி.முத்துச்சாமி, அருள்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, வடமதுரை ஒன்றியச் செயலாளர் மலைச்சாமி, வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் முனியப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கே.சம்சுதீன், கண்ணன், மீனாட்சிசுந்தரம், உட்பட 200 பேர் பங்கேற்றனர்.  இதையடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது மார்ச் 31-ஆம் தேதிக்குள் எஸ்.கே.நகர் மக்களுக்கு பட்டா வழங்கப்படும். கிராமக் கணக்கில் பட்டாக்கள் சேர்க்கப்படும். நாகப்ப பிள்ளையூர் கிராமத்திற்கு திங்கள் முதல் சாலை வசதி செய்து தரப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினருக்கு கண்டனம் இதற்கிடையில் அதிமுக வலைத்தள அணி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் தூண்டுதலின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதித் தலைவர் எம்.கே.சம்சுதீன் மீது அவதூறு பரப்பும் வகையில் செய்தி பரப்பி வருகின்றனர். கொடுக்காத பட்டா கொடுக்கப்பட்டுவிட்டதாக தங்களுக்கு தாங்களே விளம்பரம் தேடிக்கொள்ளும் வகையில் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். ஆனால். பட்டா வழங்க வில்லை. சாலையும் அமைக்கவில்லை. உண்மைக்குப் புறம்பான செய்திகளை அரசியல் உள்நோக்கத்துடன் வெளியிடும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்திற்கு கட்சியின் வடமதுரை ஒன்றியக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.