திண்டுக்கல், மார்ச் 16- திண்டுக்கல் நகரத்தில் இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி மையங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர் சிறப்புப் பேரவை நடைபெற்றது. எம்.கார்த்திக் தலைமைவ கித்தார். மாநிலத் துணைச்செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் நிருபன்பாசு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிர்வாகிகள்
தலைவராக விஷ்ணுவர்த்தன், செயலாளராக கார்த்திக், பொருளாளராக அஜீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திண்டுக்கல் நகரில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் இல்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான பலஇடங்கள் தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. இந்த இடங் களை மீட்டு விளையாட்டு மைதானங்கள், இளை ஞர்கள் திறன் மேம்பாட்டுக்கான உடற் பயிற்சிக்கூடங்கள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை யில் உள்ள ரத்த வங்கியை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.