tamilnadu

img

அமைச்சர் சீனிவாசன் நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி அம்பேல்!

திண்டுக்கல், ஜூன் 4- தனது சொந்தப் பணத்தில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரிசி மளி கைப் பொருட்களை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கி யுள்ளார். திண்டுக்கல் மரியநாதபுரம், அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று வனத் துறை அமைச்சர் சீனிவாசன் கொரோனா நிவாரணப் பொருட்களாக ஐந்து கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கினார். பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமைச்ச ரின் வருகைக்காக காத்திருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக அதிமுக பிரதிநிதி கள் இதற்காக கொடுக்கப்பட்ட நீல நிற டோக்கன்களை அனைவரும் வைத்திருந்த னர். அமைச்சர் சீனிவாசன் வந்ததும் நிவா ரணப் பொருட்களை வழங்கினார். மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வில்லை. நிவாரண பொருட்கள் பெற வந்த பயனாளிகளை  அதிமுகவினர், காவல்துறை அதிகாரிகள், சில பத்திரிக்கையாளர்கள் ஒழுங்குபடுத்தினர்.   எதிர்கட்சியினர் அமைச்சர் சீனிவாசன் எதற்காக  சொந்தப் பணத்தை செலவு செய்கி றார். அரசிடம் கூடுதலாக கேட்டு மக்களுக்கு வழங்கவேண்டியது தானே என கேள்வி யெழுப்பினர்.