tamilnadu

img

தோழர் கே.வரதராசனுக்கு அஞ்சலி

திண்டுக்கல், மே 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரத ராசன் மறைவுக்கு கட்சியின் திண் டுக்கல் மாவட்டக்குழு அலுவல கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், மாவட்டக்குழு உறுப் பினர் கே.ஆர்.பாலாஜி, மூத்த தோழர் ஆர்.மணி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் சரத்குமார், நிருபன்பாசு, இந் திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் முகேஷ், மற்றும் லெனின் ஆகி யோர் அவரது உருவப்படத்திற்கு மல ரஞ்சலி செலுத்தினர்.

தேனி
தேனி மாவட்டக்குழு அலுவல கத்தில் தோழர் கே.வரதராசன் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன்தீக்கதிர் கார்டுனிஸ்ட் வீரா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், சிஐடியு மாவட்டத்தலைவர் சி.முரு கன், தாலுகா செயலாளர் சி.சடை யாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் பா.ராமமூர்த்தி, இ.தர்மர், சி. முனீஸ்வரன், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வி.என்.ராமராஜ் ,வி.ராஜேந்திரன், மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆண்டிபட்டி கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி யின் தேனி மாவட்ட செயலாளர் டி. வெங்கடேசன், ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமர் உள்ளிட்ட ஏராளமானோர் கே.வரதராசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

போடி கட்சி அலுலவலகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எல்.ஆர்.சங்கரசுப்பு, தாலுகா செயலாளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.கே.பாண்டியன், பி.சந்திர சேகர், கே.செல்வராஜ், தங்கபாண்டி, மூக்கையா மற்றும் விருமாண்டி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியகுளம் கட்சி அலுவல கத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் சு.வெண்மணி, ஜி.முத்து கிருஷ்ணன், மன்னர் மன்னன், வாலி பர் சங்க செயலாளர் சவுந்திரபாண்டி மற்றும் ஜி,சுப்ரமணி உள்ளிட்ட பலர் மறைந்த தலைவருக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

கம்பம் காந்தி சிலை அருகில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு ஏரியா செயலாளர் ஜிஎம் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.அண்ணா மலை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.மோகன் பி.ஜெயராஜ், கே. ஆர். லெனின், எஸ் பன்னீர்வேல், எஸ். சின்னராஜ், பி. கருப்பசாமி, எஸ்.காஜா மைதீன், கே.கர்ணன், எஸ். கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன் னாரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். சின்னமனூரில் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.பொம்மையன், நடராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கே. வரதராசன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

தீக்கதிர் அலுவலகம்
மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் தீக்க திர் முன்னாள் ஆசிரியர் வி. பரமேசு வரன், தீக்கதிர் ஆசிரியரும் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இடைக் கமிட்டி செயலாளர் ப. முருகன், தீக்க திர் மேலாளர் ஜோ. ராஜ்மோகன், விளம்பர மேலாளர் உமாபதி, எழுத்தா ளர் என்.ராமகிருஷ்ணன் மற்றும் தீக்க திர் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.