tamilnadu

தருமபுரி அருகே சிறுமி கடத்தல் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தருமபுரி, மே 14- தருமபுரியில் 13 வயது சிறுமியைக் கடத்திய வழக்கில் எம்பிஏ பட்டதாரி இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.தருமபுரியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 10 ஆம் தேதி, வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க இயலாததால் தாய் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர காவல்துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையில், தருமபுரி அருகேயுள்ள மிட்டாநூலஅள்ளியை அடுத்த கடத்தூரான் கொட்டாய்கிராமத்தைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி செந்தில்குமார் (24) என்பவர், சிறுமியைக் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை மீட்ட காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்தனர்.