காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, தருமபுரியில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதியில் திடீரென பெய்த மழை, கர்நாடக அணைகளில் நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. முன்னதாக, ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவானது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6,500 கன அடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, நீர்வரத்து திடீரென அதிகரித்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளதால், சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.