tamilnadu

img

மக்களை அச்ச உணர்விலேயே வைத்திருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது அ.சவுந்தரராசன் பேச்சு

தருமபுரி, நவ. 24- மக்களை அச்ச உணர்விலேயே வைத்திருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் குறிப்பிட்டுள்ளார். சிஐடியு 16-வது அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மன்ட பத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பி னர் சி.அங்கம்மாள் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, இந்திய நாட் டில் சுயதொழில் செய்வோர் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள்  90 சதவிகிதம் பேர் உள்ளனர். இவர் களை முதலாளிகளின் அடிமையாக இருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது. அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா தொழிலாளர்க ளுக்கு தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த முறையில் ஊதியம் அளிக்கும் அவலநிலை உள்ளது. இவர்களுக்கு காலமுறை ஊதியம், பாதுகாப்பான பணி ஓய்வூதியம் கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி யாற்றும் 2.5 லட்சம் பணியாளர்க ளுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிரந்தர தொழி லாளர்களை வெளியேற்றிவிட்டு ஒப்பந்த முறையில் தொழிலாளர் களை மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத் திற்கு நியமிக்க மத்திய அரசு திட் டமிட்டுள்ளது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியா ருக்கு விற்றுவிட்டால் ஏழை மக் களின் கல்வி, மருத்துவ சேவைக்கு மத்திய அரசு எப்படி நிதி ஒதுக்கும் என கேள்வி எழுப்பினார். செல்வத்தை உண்டாக்குபவர்கள் பெரும் முதலாளிகளே என மோடி கூறியுள்ளார். அது உண்மை இல்லை. தொழிலாளர்களும் விவசாயிகளும் தான் செல்வத்தை உண்டாக்குபவர் கள். இவர்கள் உண்டாக்கிய செல் வத்தை கொள்ளையடிப்பவர்கள் தான் பெரும் முதலாளிகள் என தெரி வித்தார். இந்தியாவில் சாதி, மத மோதலை உருவாக்கவேண்டும் என்று மோடி நினைக்கிறார். அயோத்தி விவகாரத்தில் பல ஆயிரம் உயிர் களை பலி கொண்டுள்ளனர். சிறு பான்மை மக்களை அச்சுறுத்தி அச்ச உணர்விலேயே வைத்திருக்க வேண் டும் என பிஜேபி அரசு நினைக்கிறது. பிறப்பால், மதத்தால், சாதியால் வேற்றுமை இருந்தாலும் தொழி லாளர்களை வர்க்க உணர்வோடு ஒன்று சேர்த்து போராடும் வேலையை சிஐடியு செய்கிறது. தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாகப் பேசும் சிலர் ஏழை மக் களை பற்றி பேசுவதில்லை. இந்தியா வில் 20 கோடி மக்களுக்கு இரவு உணவு இல்லை. இதைப்பற்றி ஊட கங்களும் பேசுவதில்லை. பசி, பட்டி ணியில் இருக்கும் மக்களைப் பற்றி விவாதிப்பதில்லை. கேரளா அரசு  முறைசாரா தொழிலாளர்களுக்கு நாள்  ஒன்றுக்கு ரூ.600 வழங்க சட்ட மியற்றி உள்ளது. ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசின் மோட் டார் வாகன சட்ட திருத்தத்தால் 10 கோடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இந்நிலை யில் மத்திய அரசு தற்போது 2.5 லட்சம் கோடி ரூபாய் முதலாளிகளுக்கு மானியம் வழங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கும், தொழிலாளர்க ளுக்கும் எந்த மானியமும் வழங்க வில்லை.  இந்நிலையில், சென்னையில் நடைபெறும் சிஐடியு அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்திட வேண்டும். மாநாடு குறித்த பிரச்சா ரத்தை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.6 லட்சத்து 20 ஆயிரமும், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.29 ஆயிரமும், சிஐடியு மாத இதழ் ஆண்டு சந்தா 300 க்கான தொகையையும் சவுந்தரராசனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் எம்.சந்திரன், மாவட்ட செய லாளர் சி.நாகராசன், மாவட்ட நிர்வா கிகள் பி.ஆறுமுகம், எம்.மாரிமுத்து, ஜி.வெங்கட்ராமன், சி.முரளி, சி.ராஜி, சி.ரகுபதி, ஜே.ஆரோக்கியதாஸ், எஸ். சண்முகம், எம்.ஈஸ்வரி, ஆர்.செல் வம், பி.ஜிவா, எம்.ரங்கநாதன், டி.லெனின்மகேந்திரன், எஸ்.லில்லி புஷ்பம், பி.ஜெயக்குமார், கே.பெரு மாள் உள்ளிட்ட பலர் பேசினர். இறு தியாக மாவட்டபொருளாளர் ஏ.தெய் வானை நன்றி கூறினார்.