தருமபுரி, மார்ச் 14- வருங்கால தலை முறைக்கு மாசு அற்ற சுற்றுப் புறச் சூழலை உருவாக்க வேண்டுமென தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தருமபுரியில் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் மின்னணு கழிவுகள் மேலாண்மையின் கீழ் தகவல், விளக்கம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தருமபுரியில் மின்னணு கழிவுகளை பொதுமக்கள் முறையாக கையாளததாலும், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்து கொள்ளாததாலும் சுவாச பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் குழந் தைகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தற்போதைய சூழலில் மின்னணு உபகர ணங்கள் இன்றி வாழ்வது மிகவும் கடினம். இந்த உபகரணங்களின் உபயோகத்திற்கு பிறகு அவற்றை முறையாக சேகரித்து மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீகாரத்துடன் செயல்படும் மறுசுழற்சி நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். நம்முடைய வருங் கால தலைமுறைக்கு மாசு அற்ற சுற்றுப் புறச் சூழலை உருவாக்கி தருவதே அனை வருடைய பொறுப்பு. எனவே பொறுப் புல்ல குடிமக்களாக அனைவரும் செயல் பட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறி னார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரி யத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் முனைவர்.பா.காமராஜ், மின்னணு கழிவு மேலாண்மை குறித்த விழிப்பு ணர்வின் அவசியத்தை குறித்து பேசினார். சென்னையில் இயங்கி வரும் இத்தகைய மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை நிறுவ னத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் வி.எஸ். எத்திராஜ், மின்னணு கழிவுகளை முறைப் படி கையாளாமல் விட்டால் அதனால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு ஏற்படும் தீங்குகளை விளக்கி, மின்னணு கழிவுகளை முறையாக கையாள வேண்டியதன் அவசியத்தை வீடி யோ காட்சி மூலம் விளக்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, உள்ளாட்சி அலுவ லர்கள், தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள், பள்ளி, கல்லூரிகளின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.