tamilnadu

img

ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கப்பல் பொறியாளர் பலி

பென்னாகரம், மே 26-ஒகேனக்கல் ஆற்றில் கப்பல் பொறியாளர் மூழ்கி பலியானார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இரண்டரை மணி நேரம் பிரேத பரிசோதனை கூடத்திற்குள் கொண்டு செல்லாமல் வாசலில் உடல் வைக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.பண்டிச்சேரி மாநிலம் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன் விஸ்வநாதன் (30). இவர் கப்பல் பொறியாளராக உள்ளார். விஸ்வநாதன் தனதுநண்பர்கள் 5 பேருடன் சனியன்று தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வந்தனர். ஒகேனக்கல் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது எதிர்பாராத விதமாக விஸ்வநாதன் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறித்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு மாலை 5 மணிக்கு வந்த உடலை இறக்கி வைக்க பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் சுமார்இரண்டரை மணி நேரம் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க மருத்துவமனைக்கு வந்ததை அறிந்து கொண்ட நிர்வாகம் இரவு 8 மணிக்கு ஒரு மருத்துவர், ஒரு துப்புரவு பணியாளர், ஆம்புலன்ஸ் டிரைவரின் உதவியுடன்இறந்த விஸ்வநாதனின் உடலை எடுத்து வைத்தனர். பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களால் புறநோயாளிகள், உள்நோயாளிகள், கர்பிணி பெண்களை அலட்சியப்படுத்தும் போக்காகவே உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.