tamilnadu

img

முழுமையாக பாலை கொள்முதல் செய்திடுக

தருமபுரி, ஆக. 2- தருமபுரியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முழுமையாக பாலை கொள்முதல் செய்யாததற்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் சாலையில் பாலை ஊற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல் பட்டு வருகிறது. அதில், 200க்கும் மேற் பட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள் முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பாலின் அளவை குறைக்கும்படி, தருமபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், லிட்டருக்கு 100 மில்லி வீதம் பால் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் தினமும் 5 லிட்டர் முதல் 10 லிட்டர் பால் வரை மீதம் ஏற்படு கிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட  ஆவின் நிர்வாகத்திடம் விவசாயிகள் பல முறை முறையிட்டும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில், ஆவேசமடைந்த மொரப்பூர் பகுதி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் முழுமை யாக பாலை கொள்முதல் செய்ய வலியு றுத்தி சனியன்று பாலை சாலையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.