தருமபுரி, ஜூன் 17- கொரோனாவால் இறந்த மின் ஊழியர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்ககோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனாவால் இறந்த மின் ஊழியர் குடும்பத்துக்கு பிரதமர் காப் பீடு திட்டத்தில் வழங்குவது போல் ரூ.50 லட்சம் வழங்கவேண்டும். கொரோனா சிவப்பு மண்டல பகுதி களில் 33 சதவிகிதம் ஊழியர்களை மறுசுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவிட வேண்டும். பொறியாளர், அலுவலர், ஊழியர்களுக்கு முகக்க வசம் கையுறை, கிருமிநாசினி ஆகியவை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடியும், மின் வாரிய விதிகள் படியும், பட்டயம் அல்லாத பொறியாளர்களுக்கு ஜெஇ பதவி உயர்வு வழங்கவேண்டும்.
டிஏ மற்றும் பட்டயம் அல்லாத களப்பிரிவு தொழிலாளர்களுக்கு ஜெஇ பதவி நிலை - 2 உயர்வு வழங்க வேண்டும். ஏஇ,ஜெஏ உள்ளிட்ட பதவிகளில் இருந்து அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு 3 வருடம் என உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரும புரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட னர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு, மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாவட்ட தலை வர் டி.லெனின், மகேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பி.ஜீவா சிறப்புறையாற்றினார்.மின்வாரிய பொறியாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, ஓய்வுபெற்றோர் மின்ஊழியர் அமைப் பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜ யன், மின்ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்ட பொருளாளர் எம்.ஜெயக்குமார் ஆகியோர் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.