tamilnadu

img

பாப்பிரெட்டிபட்டியில் ஜவ்வரிசி தொழிற்சாலை திமுக வேட்பாளர் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.4-

பாப்பிரெட்டிபட்டியில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி வாக்குறுதி அளித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குறிஞர் ஆ.மணி கடத்தூர் பேரூராட்சி மக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது வேட்பாளர் ஆ.மணி பேசுகையில், மத்தியிலும், மாநிலத்திலும் திமுக கூட்டணிஆட்சி அமைந்தவுடன் நீட்தேர்வுரத்துசெய்யப்படும். ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்துக்கு ரூ.72 ஆயிரம்வழங்கப்படும். நிறுத்தப்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகைமீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாப்பிரெட்டிபட்டியில் அரசு கூட்டுறவுஜவ்வரிசி தொழிற்சாலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உதயசூரியன்சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் எனகேட்டுக்கொண்டார்.இதில், திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.