tamilnadu

img

ஜிஎஸ்டி மூலம் ‘சாதனை’ படைத்த மோடி

மும்பை:
மும்பையில் 87 ஆண்டுகளாக இயங்கிவந்த, பிஸ்கட் தயாரிப்புத் தொழிற்சாலையை, ‘பார்லே’ நிறுவனம் நிரந்தரமாக இழுத்து மூடியுள்ளது.1929-ஆம் ஆண்டு மும்பையில் சௌகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்டது ‘பார்லே’ நிறுவனம். 1939 முதல் பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு மாற்றாக உருவான ‘பார்லே’ இந்தியாவின் பழமையான பிஸ்கட்தயாரிப்பு நிறுவனமாகும்.தற்போது 1000 கோடி ரூபாய் விற்பனையுடன் “பார்லே -ஜி’, ‘மொனாகோ’, ‘மேரி’ பிராண்ட் பிஸ்கட்ஸ் தயாரிப்புகளை ‘பார்லே’நிறுவனம் வைத்துள்ளது. இந்தியா கிராமப்புற சந்தையில் சரிபாதியை ‘பார்லே’நிறுவனத் தயாரிப்புகள் கொண்டிருக்கின் றன.இந்நிலையில்தான், மோடி அரசு விதித்தஅதிகபட்ச ஜிஎஸ்டி வரி காரணமாக, கடந்த சிலஆண்டுகளாக, ‘பார்லே’ நிறுவனம் தள்ளாடத்துவங்கியது. 5 ரூபாய் பிஸ்கெட்டுக்குக் கூட 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது, தங்களது வர்த்தகத்தின் முதுகெலும்பையே உடைத்து விட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் மயங்க் ஷா அண்மையில் பகிரங்கமாகவே கூறினார். மேலும், பார்லே நிறுவன ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை உடனடியாக வேலையை விட்டு அனுப்புவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் கூறினார்.இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மும்பையின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிப்போன தொழிற்சாலை ஒன்றை ‘பார்லே’ நிறுவனம் நிரந்தரமாக இழுத்து மூடியுள்ளது.ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், ஹரியானா உள்பட நாடு முழுவதும் 10-க்கும்மேற்பட்ட தொழிற்சாலைகள், பார்லே நிறுவனத்திற்கு இருக்கின்றன. எனினும் கடந்த 87 ஆண்டுகளாக இயங்கிய தொழிற்சாலை என்றால், அது ‘மும்பை வைல் பார்லே’ பகுதியில் இருந்த தொழிற் சாலைதான். அந்த தொழிற்சாலையைத் தற்போது மூடியுள்ளது.அதாவது, 87 ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிய தொழிற்சாலையை, தான் கொண்டுவந்த ஜிஎஸ்டி மூலம் வெறும் 2 ஆண்டுகளில் மூடவைத்து, பிரதமர் மோடி ‘சாதனை’ படைத்துள்ளார்.